குழந்தைகளைக் கவராத பெற்றோர்கள்!

Read Time:3 Minute, 2 Second

பொதுவாக குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்தான் முன்மாதிரியாக விளங்குவர். ஆனால் மாறிவரும் சமுதாய சூழலில் இன்றைய தலைமுறை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கூட கவரவில்லை. சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் குறைந்தபட்ச ஒழுக்க நெறிகள் கூட இல்லாததற்கு அவர்களது பெற்றோர்களே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. சுமார் 1,176 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. இளைஞர்களிடம் நன்னெறிகள் குறைவானதற்கு, அவர்களது பெற்றோர்களிடம் அது இல்லாததே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. சிறுவயதில், குழந்தைகளுக்கு நன்னெறிகளை பெற்றோர்கள் கற்றுத்தர தவறிவிட்டனர். இதனாலேயே வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்கு அது பற்றி தெரியாமலேயே போய்விட்டது. மேலும் பெற்றோர்களும் நன்னெறிகளைப் பின்பற்றி நடக்காததால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருக்கத் தவறிவிட்டனர். எதற்கெடுத்தாலும் விழா எடுக்கும் கலாசாரம் பெருகி வருகிறது. சிறு சிறு விஷயங்களுக்கும் பார்ட்டி கொடுப்பது, நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாய் இருப்பது போன்ற கலாசாரம் பெருகி வருவதால், குடும்பத்தினரிடையேயான பற்று குறைந்து வருகிறது. இதனால் கலாசார ரீதியான பழக்க வழக்கங்களிலிருந்து வேறுபடுகின்றனர். அதேசமயம், தற்போது சமுதாயத்தில் எதிர்ப்படும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது குறித்து பெற்றோர்கள் கற்றுத் தரவில்லை. மேலும் குழந்தைகளுக்கு உதவி தேவைப்படும்போது செய்யாமல் அவர்களைக் குற்றம் கூறும் போக்கு பெற்றோர்களிடம் அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. “என்ன விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.’ அதைப்போல குழந்தைகளின் இளம் பிராயத்தில் நல்ல விஷயங்களை மனதில் பதிப்பதன் மூலம் ஆரோக்கியமான இளம் தலைமுறை உருவாகும் என்று ஆய்வை நடத்திய பாப் ரெய்டெமர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 ஆண்டு சண்டையில் 9 ஆயிரம் விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை தளபதி சொல்கிறார்
Next post மத்திய கிழக்கு நாடுகளில் உல்லாசப் பயணிகள் விஸாவில் தொழில் செய்பவர்களுக்கு எதிராக இலங்கை நடவடிக்கை