மத்திய கிழக்கு நாடுகளில் உல்லாசப் பயணிகள் விஸாவில் தொழில் செய்பவர்களுக்கு எதிராக இலங்கை நடவடிக்கை
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரயாணிகள் விஸாவில் செல்பவர்கள் அங்கு தொழில் செய்வதை தடுப்பதற்கான புதிய நடைமுறைகளை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது இந்த நடைமுறைகள் முதலாம் திகதிமுதல் அமுலுக்கு வரவுள்ளதாக அப்பணியகத்தின் பொது முகாமையாளர் எல்.கே ருஹ_னுகே தெரிவித்துள்ளார் இதனடிப்படையில் உல்லாசப் பிரயாணிகள் விசாவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று தொழில் புரிவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பணியகம் மேலும் தெரிவிக்கிறது.