சொத்தி உபாலி கொலைச் சந்தேக நபர் விடுதலை
பிரபல பாதாள உலகத் தலைவர் சொத்தி உபாலியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்திக ரொசான் பெரேரா என்ற சந்தேக நபரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1998ம் ஆண்டு பிரபல பாதாள உலகத்தலைவர் தொன் உபாலி ரஞ்சித் என்ற இயற்பெயரையுடைய சொத்தி உபாலி என்பவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.