ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் மீண்டும்..
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஹக்கீம் தமது நாடாளுமன்ற நிலையிலிருந்து விலகியிருந்தார் எனினும் அவரால் கிழக்குமாகாணசபை ஆட்சியை அவரால் கைப்பற்றமுடியவில்லை இதனையடுத்து தற்போது தேசியப்பட்டியலின் மூலம் அவர் நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன இதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.