உலக அளவில் பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியீடு: 12-வது இடத்தை பிடித்த மும்பை !!

Read Time:2 Minute, 3 Second

உலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலை நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு நிறுவனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியியலில் மும்பை 12-வது இடத்தில் உள்ளது. மும்பையில் வாழும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 95,000 கோடி டாலராகும். ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நியூயார்க் 3 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. லண்டன் இரண்டாவது இடத்திலும் (2.7 லட்சம் கோடி டாலர்), டோக்கியோ (2.5 லட்சம் கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளன. சான் பிரான்சிஸ்கோ (2.3 லட்சம் கோடி டாலர்), பீஜிங் (2.2 லட்சம் கோடி டாலர்), ஷாங்காய் (2 லட்சம் கோடி டாலர்) முறையே 4, 5 மற்றும் 6-வது இடங்களில் இருக்கின்றன.

அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் (1.4 லட்சம் கோடி டாலர்), ஹாங்காங் (1.3 லட்சம் கோடி டாலர்), சிட்னி (1 லட்சம் கோடி டாலர்), சிங்கப்பூர் (1 லட்சம் கோடி டாலர்), சிகாகோ (98,800 கோடி டாலர்) ஆகிய நகரங்கள் உள்ளன. இந்த 15 நகரங்களில் சான் பிரான்சிஸ்கோ, பீஜிங், ஷாங்காய், மும்பை மற்றும் சிட்னி ஆகிய நகரங்கள் தனிநபர்களின் சொத்து மதிப்பு வளர்ச்சி வேகத்தின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னிலையில் உள்ளதாக நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வறிக்கை கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு ஸ்டார் அந்தஸ்தில் ஈடுபாடு கிடையாது : நடிகை நதியா சுளீர் !!
Next post 2050ல் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு குறைந்த அளவாக இருக்கும்: ஆய்வாளர்கள் தகவல்!!