ஆஷ்னா, அதுல்யா படத்துக்கு 19 வெட்டு !!

Read Time:1 Minute, 35 Second

நெடுஞ்சாலை, மாயா படத்தில் நடித்த ஆரி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் நாகேஷ் திரையரங்கம். அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி, அதுல்யா நடித்திருக்கின்றனர். மேலும் காளி வெங்கட், மாசும் சங்கர், எம்ஜிஆர் லதா, சித்தாரா ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். சமீபகாலத்தில் பேய் படங்கள் திகில் பாதையிலிருந்து விலகி காமெடி கதைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இப்படத்தை பொறுத்தவரை இதுவரை வந்த பேய் படங்களிலிருந்து புதிய களத்தில் இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் இசாக்.

இவர் ஏற்கனவே அகடம் படத்தை இயக்கி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தவர். அவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். நவுஷத் இசை அமைக்கிறார். ராஜேந்திர எம்.ராஜன் தயாரிக்கிறார். இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் 19 இடத்தில் கட் கொடுத்தனர். முதலில் சில காட்சிகளை அனுமதிக்க கேட்ட இயக்குனர் பின்னர் கட்களுக்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!
Next post அனுஷ்கா படத்தை தவறவிட்டேன் : மம்தா மோகன்தாஸ் வருத்தம் !!