சார்க் உச்சிமாநாட்டின் போது இலங்கையில் கடல், வான் பிராந்திய கட்டுப்பாடு இந்தியாவிடம்

Read Time:11 Minute, 35 Second

அண்மையில் இந்தியாவிலிருந்து இந்திய பாதுகாப்புச் செயலர் ஸ்ரீ. விஜயசிங், வெளிவிவகாரச் செயலாளர் சிவசங்கர் மேனன் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகிய மூன்று முக்கிய உயர் மட்டப் பதவியிலுள்ளவர்கள் கொண்ட தூதுக்குழு கொழும்புக்கு வந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபய ராஜபக்ஷ ஆகிய நிறைவேற்று உயர் மட்டத் தலைவர்களுடன்நடத்திய பேச்சுவார்த்தையில் இந்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இனமோதல் சம்பந்தப்பட்ட இறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறு உயர்மட்டத்தலைவர்களும் சந்தித்துப் பேசி எடுத்துள்ள தீர்மானங்கள் பற்றி ஸ்ரீலங்கா அரச தரப்பிலிருந்தோ அல்லது இந்தியத்தரப்பிலிருந்தோ, உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அங்கு எடுக்கப்பட்ட அதிமுக்கிய தீர்மானங்கள் பற்றிப் பல்வேறு ஊடகத்தரப்புகளிலிருந்தும் பலவாறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எவ்வாறாயினும் இந்தியத் தரபிலிருந்து ஒருசில பாதுகாப்பு விவகார மற்றும் அரசியல் தரப்பு வட்டாரங்களிலிருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உயர்மட்ட வட்டாரங்கள் மற்றும் ஊடகத்தரப்புகள் மேற்படி இந்திய உயர் மட்டக் குழுவின் இலங்கைக்கான விஜயம், இரகசிய பேச்சுவார்த்தை மற்றும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் அரசியல் அதி முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் பற்றி வெளியிட்டுள்ள தகவல்களுக் கேற்ப மேற்படி பேச்சுவார்த்தையை இந்திய அரசு மூன்று முக்கிய பாதுகாப்பு மற்றும் அரசியல் இலக்குகளைக் குறிவைத்து நடத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முதலாவது நோக்கம் ஸ்ரீலங்காவில் நடத்தப்படவிருக்கும் தெற்காசிப் பிராந்திய ஒத்துழைப்புக்கான “சார்க்’ மாநாட்டில் பங்கு பற்ற வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது மற்றும் போக்குவரத்துகளின்போதும் அவருக்கு உயர்மட்டப் பாதுகாப்பை உறுதிப் புடுத்துவதாகும், இந்த நோக்கம் வழமையானது போல் தென்பட்டாலும் இந்திய அரசின் உயர்மட்டப் பிரநிதிகளின் கொழும்பு விஜயம் மற்றும் பேச்சுவார்தைகளுக்கான இரண்டாவது முன்னையதைக்காட்டிலும் உள்ளார்ந்த நோக்கம் யாதெனில் ஆசிய நாடுகளிடையே இலங்கைப் பிரச்சினைகள் சம்பந்தமாகத் தீர்மானங்களை மேற்கொள்ளும் பிராந்திய உரிமை கொண்ட அவ்வாறே தீர்மானங்கள் மேற்கொளளும் சக்திவாய்ந்த “சண்டியன்’ தானே என உலகத்துக்குக் காட்டுவதாகும். இதனை அடுத்து இந்திய அரசின் மூன்றாவது,நோக்கம் ஸ்ரீலங்காவில் நிலவும் சிங்கள, தமிழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக இந்திய அரசு மத்தியஸ்தம் செய்கிறது என்ற தோற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்குவதன் மூலம் தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக எழுந்துள்ள இந்திய ஆளும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்குவதாகும்.

மேற்படி மூன்று நோக்கங்களும் ஸ்ரீலங்கா இந்திய தரப்பில் இன்று நேற்று உருவானவையல்ல மிக நீண்டகாலமாகவே நிலவிவருவதாகவும், இரு நாடுகளின் உறவுகளையும் மிகப் பலமாகப் பாதிப்பவையுமாக அமைந்துவிட்ட இருதரப்பு விடயங்களாகும்.

“சார்க்’ நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது,. விசேட தீர்மானங்களின் அடிப்படையில் கொழும்பில் நடத்த ஏற்பாடாகியுள்ள இந்த மாநாட்டில் பங்குபற்றவிருக்கும் நாடுகளின் தலைவர்கள் கொழும்புக்கு விரைவில் வரவுள்ளார்கள் இந்நிலையில் அவர்களுக்கான உத்தியோகப் பூர்வமான பாதுகாப்பு ஏற்படுகளை ஸ்ரீலங்கா அரசு செய்துள்ளது. முதலில் “சார்க்’ மாநாட்டில் கண்டி நகரைமையமாக வைத்தே நடத்துவற்கு ஸ்ரீலங்கா அரசு தரப்பில் தீர்மானிக்கப்பட்டபோதும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வசதிகள் ஏற்பாடுகள் கொழும்பிலேயே கூடுதலாக இருக்கும் காரணத்தால் கொழும்பில் மாநாட்டை நடத்த பின்னர் தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டுக்காக விஜயம் செய்யவிருக்கும் சார்க் அமைப்புத் தலைவரும் இந்தியப் பிரதமருமாகிய பேராசியர் மன்மோகன் சிங் ஸ்ரீலங்காவில் போக்குவரத்துச் செய்வற்காக ஏனைய தலைவர்களுக்கு வழங்கியிருப்பதுபோலவே உயர்மட்டப் பாதுகாப்பை ஸ்ரீலங்கா அரசு வழங்கியுள்ள போதிலும் அவருடைய அனைத்து நடமாட்டங்களின் போதும் உயர்மட்டப் பாதுகாப்பை உறுதிசெய்வதே இந்திய பாதுகாப்பு உயரதிகாரிகளின் முக்கிய நோக்கம் என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இந்தியப்பிரதமரின் உயர் மட்டப்பாதுகாப்புக்கான தீவிர நடவடிக்கைளை இந்திய அரசு எடுத்துள்ளது.

மேற்படி இருநாட்டு உயர்மட்டத் தலைவர்களும் “சார்க்’ மாநாட்டில் இந்தியப் பிரதமருக்கு வழங்கவேண்டிய உயர்மட்டப் பாதுகாப்புப் பற்றி நடத்திய பேச்சுவார்த்தைக்கேற்ப இந்தியப் பிரதமருக்கான பாதுகாப்பை முற்றாக இந்தியப் பாதுகாப்புப் பிரிவின் ஏற்பாடுகள் மூலம் வழங்குவதே இந்திய அரசின் நோக்கமாகும். இந்தவகையில் பிரதமர் மன்மோகன்சிங் ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளும் அனைத்துப் போக்குவரத்துக்களுக்குமாக ஹெலிகொப்டர்கள், மோட்டார் வாகனங்கள் ஆகியன இந்தியாவிலிருந்தே கொண்டுவரப்படவுள்ளன. அவ்வாறே இந்தியப் பிரதமர் பகல்வேளைகளில் மட்டுமன்றி இரவுவேளைகளிலும் தங்கியிருக்கும் நிலையங்கள், போக்குவரத்துகளின் போது தாங்கிருக்கும் நிலையங்கள் ஆகியவற்றில் இந்திய சிரேஷ்ட படை பாதுகாப்புப் படையணியாகிய “கரும்பூனைகள்’ (ஆஃஅஇஓ இஅகூகு) படையினரும் மற்றும் விசேட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பெரும் எண்ணிக்கையில் நிலைகொண்டிருப்பர்.

இவ்வாறு இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காகு ஸ்ரீலங்கா வரவிருக்கும் “கரும்பூனைகள்’ படையணியினர் விசேட அதிரடிப் படையினர், விசேட பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த படை உத்தியோகதர்கள் உட்பட சுமார் 3000 இந்தியப்படையினர் ஸ்ரீலங்கா வரவிருப்பதாக இந்தியப் பாதுகாப்பு வட்டாரங்கள் உட்பட சம்பந்தப்பட்ட தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. ஆயினும் இவ்வாறு இந்தியப்பிரதமரின் பாதுகாப்புக்காக இலங்கை வரவிருக்கும் இந்தியப் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை பற்றி இந்திய அரசதரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். தகவல்களுக்கேற்ப இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக 1500 க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் இலங்கை செல்ல வரவிருப்பதாக மட்டுமே கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியப் பிரதமர் ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும் நாட்களில் ஸ்ரீலங்காவுக்குச் சொந்தமான வான் பரப்பும், கடற்பிராந்தியங்களும் இந்திய விமானப் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் பாதுகாப்புக்குக் கீழேயே இருக்கும் எனவும் இதற்காக ஸ்ரீலங்கா வான்பரப்பும் , கடற்பிராந்தியமும் இந்தியாவின் பாதுகாப்புக் கிழ் கொண்டுவரும் வகையில் அவற்றை இந்திய அரசு பொறுப்பெடுக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சமம்பந்தப்பட்ட தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இதற்கேற்ப காலிமுகக் கடற்பிராந்தியம் உட்பட ஸ்ரீலங்காவைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியங்களில் இந்திய யுத்தக்கப்பல்களை நிறுத்துவதற்கும், “சார்க்’ மாநாடு நடக்கும் நிலையங்கள் உட்பட கொழும்பு பிரதேசங்களுக்கு மேல் வான்பரப்புகளில் இந்திய ஹெலிக்கொப்டர்கள் பறந்து பாதுகாப்பு நடவடிக்ககைகளை மேற்கொள்ளும் எனவும் அவ்வாறே வான்பரப்புப் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளுடன் நடவடிக்கைகளுக்குத் தயாராக ஆகாய மற்றும் கடல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்திய அரசு செய்யவுள்ளதாக மேலும் குறித்த தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் மீண்டும்..