40 வருடத்துக்கு பின் இலங்கை தமிழ்ப் படம்!!
40 வருட இடைவெளிக்குப் பிறகு முழுநீள இலங்கை தமிழ்ப் படமாக, முற்றிலும் அங்குள்ள கலைஞர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது, கோமாளி கிங்ஸ். ஒளிப்பதிவு, மகிந்த அபேசிங்க. இசை, ஸ்ரீராம் சச்சி. இயக்கம், கிங் ரட்ணம். அவர் கூறுகையில், ‘லண்டனில் இருந்து சொந்தக்காரரின் திருமணத்துக்காக தாய்நாடு திரும்பும் ஒரு குடும்பத்தார் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. இது பல தயாரிப்பாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம்’ என்றார்.