192 கோடி பரிசு பெற்றதாக இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு!!

Read Time:1 Minute, 31 Second

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகளை போலீசார் கூறியுள்ளனர். இதை மறுத்துள்ள அவர், பதவி விலக போவதில்லை என அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (68). இவர் ஏற்கனவே 1996-99 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 2 முறை பிரதமராக இருந்துள்ளார். முந்தைய 10 ஆண்டு ஆட்சியில் இவர் ரூ.192.35 கோடியை பரிசாக பெற்றதாக இஸ்ரேல் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கடந்த 14 மாதங்களாக விசாரணை நடத்திய போலீசார், பிரதமர் லஞ்சம் ெபற்றதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.இதை தொடர்ந்து, நெதன்யாகுவை பதவி விலகும்படி எதிர்க்கட்சிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இதையடுத்து, தொலைக்காட்சியில் நேற்று உரையாற்றிய நெதன்யாகு, ‘‘ நண்பர்களிடம் இருந்து பரிசு பெறுவது சட்ட விரோதமல்ல. எனவேதான், மக்கள் என்னை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்காக நான் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணியாக நடிக்க கஷ்டப்பட்டேன் : இவானா!!
Next post (மருத்துவம்)உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி!!