ஜெருசலம் நகரில் பெண்மணி ஒருவர் தன்னுடைய குழந்தையை காரிலிருந்து வீசி அதன் உயிரை காப்பாற்றி இருக்கிறார்
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரில் பெண்மணி ஒருவர் தன்னுடைய குழந்தையை காரிலிருந்து வீசி அதன் உயிரை காப்பாற்றி இருக்கிறார். ஜெருசலம் நகரில் பாலஸ்தீன ஊழியர் ஒருவர் பொக்லைன் வாகனத்தை கொண்டு எதிரே வந்த கார்கள் மற்றும் பஸ்சின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அப்போது காரிலிருந்த பெண்மணி ஒருவர் இதனை கண்டு திடுக்கிட்டுப் போனார். பொக்லைன் வாகனம் கார் மீது தாக்குதல் நடத்த வருவதை தெரிந்து கொண்டு திடுக்கிட்டுப் போன அவர், உடனே தனது மடியிலிருந்த குழந்தையை எடுத்து காருக்கு வெளியே வீசினார். இதன் காரணமாக குழந்தை தப்பித்து விட்டது. காரிலிருந்த தாய் காயங்களோடு மீட்கப்பட்டார். இந்த தாக்குதலுக்கு இலக்கான பஸ்சில் மாட்டிக் கொண்ட குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டது. ஆனால் அந்த குழந்தையின் தாய் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.