குழந்தைகள் காதில் பிரச்னையா?

Read Time:3 Minute, 13 Second

மனிதன் உடலில் மென்மையான உறுப்புக்களில் ஒன்று காது. காதில் ஏற்படும் உபாதைகளை உடனுக்குடன் கவனிக்காமல் விட்டு விட்டால் காலம் முழுவதும் இன்னல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும். எனவே, காதில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் கவனிப்பது முக்கியம். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு காதில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லையெனில் காலம் முழுவதும் அவஸ்தைப் பட வேண்டிய அவலநிலை ஏற்படும்.
காதை கவனிக்க…

* கடுமையான காதுவலிக்கு ஐந்தாறு துளி வெள்ளைப் பூண்டு சாற்றினை காதில் விட்டால் உடனே தீர்ந்துவிடும்.
* காதினுள் புழுக்கள் இருந்தாலும், காது வலி ஏற்பட்டாலும், சில துளி காடியை (விநிகர்) காதினுள் விட்டால் புழுக்கள் இறந்துவிடும்.
* வெற்றிலைச் சாற்றினைப் பிழிந்து இரண்டு மூன்று சொட்டுக்கள் காதில் விட்டு வந்தால் காதுவலி நீங்கிவிடும்.
* மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி, அதில் இரண்டு துளிகள் காதில் இட்டு வந்தால் வலி குணமாகும்.
* ஊமத்தம் பூவை கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து அதில் இரண்டு துளிகள் காதில் இட்டால் வலி குணமாகும்.
* இரண்டு கிராம் பெருங்காயத்தை இருபது மி.லி. நல்லெண்ணையில் காய்ச்சி வடித்து, ஓரிரு துளிகள் காதில் இடலாம்.
* குழந்தைகள் காதுவலி ஏற்பட்டு துடித்தால் துளசிச்சாறு, தேன், உப்பு மூன்றையும் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை கொடுக்க வேண்டும்.
* காதுகளில் ஈ, கொசு புகுந்துவிட்டால் குப்பைமேனி இலையில் சிறிது நீர் தெளித்து கசக்கி நான்கு துளி சாற்றைப் பிழிந்தால் அது இறந்துவிடும். இறந்தவற்றை மிகவும் எளிதாக காதில் இருந்து வெளியேற்றிவிடலாம்.
* வெள்ளைப்பூண்டை இடித்து பஞ்சுபோல் செய்து மெல்லிய துணியில் முடிச்சுப் போட்டு அனலில் காட்டிப் பிழிந்து அந்த தைலத்தை 3 அல்லது 4 துளிகள் காதில் விட்டு வர காது மந்தம், வலிகள் மாயமாகும்.
* எலுமிச்சம் பழச்சாறு இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட்டால் வலி நீங்கும்.
* கரிப்பான் இலைச்சாறை காதில் விட காது வலி மாயமாகும்.
காதை கவனிப்போம் கவலையை தவிர்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடன அறைக்கு அருகில் மயக்கமுற்ற மாணவி உயிரிழந்தார்!!
Next post கையிலே கலை வண்ணம்!!