அழுத்தத்தை அதிகரிக்க இணக்கம்!!

Read Time:1 Minute, 36 Second

தனது அணுக்குண்டு, ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடும்வரை, வடகொரியா மீது அழுத்தங்களைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயும் உறுதிபூண்டுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது என நேற்றுத் தெரிவித்த ஜப்பானிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, அணுக்குண்டுத் திட்டங்களை வடகொரியா முழுமையாகக் கைவிடும்வரை, “பயன்தரக்கூடிய கலந்துரையாடல்கள்” நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என இருவரும் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்டது.

கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காக, கலந்துரையாடல்களை ஆரம்பிப்பது பொருத்தமற்றது என, தொலைபேசி உரையாடல் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிரதமர் அபே குறிப்பிட்டார்.

அத்தோடு, வடகொரியாவுக்கு எதிராக ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளை நடைமுறைப்படுத்த, இரு நாடுகளும் தொடர்ச்சியான அழுத்தத்தை வழங்குமெனவும், இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும்!!
Next post தங்க மாலைகளை கொள்ளையடித்த நபர் கைது!!