மத்திய பிரதேசத்தில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த எம்பி!!

Read Time:1 Minute, 41 Second

மத்திய பிரதேசத்தில் இயங்கி வரும் பள்ளியின் கழிவறையை பாஜ எம்பி சுத்தம் செய்தார். இதுகுறித்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பி ஜனார்தன் மிஷ்ரா நேற்று கஜுவா என்ற கிராமத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு சென்றார். பள்ளியை அவர் ஆய்வு செய்தபோது, அங்குள்ள கழிவறை சுத்தம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக கழிவறையை வெறும் கையால் சுத்தம் செய்தார். இதற்காக அவர் எவ்வித உபகரணத்தையும் பயன்படுத்தவில்லை. கழிவறையில் மண் அடைத்து இருந்த நிலையில், அதை அவர் சுத்தம் செய்தார்.

பள்ளியின் கழிவறையை எம்பி சுத்தம் செய்யும் வீடியோ வைரலாக பரவியது. எம்பி ஜனார்தன் மிஷ்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்ட பணிகளை செயல்படுத்துவதில் ஜனார்தன் எம்பி மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருந்து வருகிறார். தனது தொகுதியில் இதுகுறித்து மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து 15 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை!!
Next post தீக்காயங்களை குணப்படுத்தும் மருத்துவம்!!