வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் பிள்ளையான் கட்சியும் போட்டியிடவுள்ளது
எதிர்வரும் வடமத்திய மாகாணசபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிள்ளையான் கட்சியும் போட்டியிடவுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு பேர் போட்டியிட வாய்ப்பளிக்க உள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் வடமத்திய மாகாணத்தில் 110000 தமிழ் வாக்காளர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பலகட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.