திருகோணமலையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
திருகோணமலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் திருகோணமலை உப்புவெளியைச்சேர்ந்த செல்வநாயகம் (வயது31) என்பவரே இவ்வாறு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார் இனந்தெரியாத கும்பலொன்று இவரை சுட்டுகொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர் கடந்த 26ம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்தார் என அவரது உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்