இந்த வார ராசிபலன் (04.07.08 முதல் 10.07.08 வரை)

Read Time:11 Minute, 32 Second

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய)
பொது: அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். எதிலும் நிதானம் அவசியம். எதிர்ப்புகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதாரம் படிப்படியாக மேம்படும்.
பெண்களுக்கு: பண வரவு திருப்திகரமாக இருக்கும். திடீர் செலவுகளும் காத்திருக்கின்றன. உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் சுமூக நிலை நிலவும்
வேலை பார்ப்போருக்கு: திட்டமிட்டு செயல்படுவீர்கள். இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

ரிஷபம் ( கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசிரீஷம் 2-ம் பாதம் முடிய)

பொது: எதிலும் தைரியமாக இறங்கி செயல்படுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. குடும்பத்தில் சுமூக நிலை காணப்படும்.

பெண்களுக்கு: செலவுகள் அதிகரிக்கும். மன சங்கடம் ஏற்படும். தேவையில்லாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. கோபத்தைக் குறைப்பது நல்லது. வேலைகள் முடிவதில் இழுபறி நிலவும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்களிடம் கவனம் தேவை. முடிவுகளில் கவனம் தேவை. இடமாற்றம் இருக்காது. பதவி உயர்வு தாமதப்படும். வார இறுதியில் நிலைமை மேம்படும்..

மிதுனம் (மிருகசிரீஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொது: பணத்திற்குப் பிரச்சினை இருக்காது. அறிமுகம் இல்லாதவர்களால் பிரச்சினை ஏற்படும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. வீண் அலைச்சலால் உடல் நலம் கெடும். செலவுகள் கூடும்.

பெண்களுக்கு: மன தைரியம் அதிகரிக்கும். சகோதர வழியில் சாதக நிலை காணப்படும். சுபகாரியம் கூடிவரும். சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் நெருக்கம் அதிகமாகும். ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த காரியம் கூடி வரும்.

கடகம் ( புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொது: காரிய தாமதம் ஏற்படும். வீண்செலவுகள், அலைச்சலால் மனம் நோகும். பழைய பாக்கி வசூலாகும். கடன் தொல்லை சரியாகும். வார இறுதியில், நிலைமை சீரடையும். பொருளாதாரம் மேம்பாடு அடையும்.

பெண்களுக்கு: சாதுரியமாக பேசி காரியத்தை சாதிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை நிலவும். கணவருடன் சாதகமான நிலை காணப்படும். வெளியூர் பயணத்தால் நல்லது நடக்கும்.

வேலை பார்ப்போருக்கு: வேலையில் நல்ல மேம்பாடு காணப்படும். காரியம் கை கூடும். வீண் அலைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு வேகம் கொடுக்கலாம்.

சிம்மம் (மகம் ,பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)

பொது: எதையும் வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் வேகமாக இருப்பீர்கள். எதிரிகள் விலகி ஓடுவார்கள். நினைத்தது நடக்கும். வராத பண பாக்கி வசூலாகும். எதையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு: மனக் குழப்பம் ஏற்படும். உடல் நலனில் ஆரோக்கியம் தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும். பிரச்சினைகளை கண்டு விலகியிருக்கவும்.

வேலை பார்ப்போருக்கு: பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான நிலை காணப்படும். மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ( உத்திரம் 2-ம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொது: காரிய வெற்றி உண்டாகும். பாராட்டும், புகழும் தேடி வரும். வாக்கு வன்மையால் எதையும் சாதிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி தேடி வரும்.

பெண்களுக்கு: சுப காரியம் கூடி வரும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி, நிம்மதி நிலவும். பயணங்களில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: கனிவாக பேசி சக ஊழியர்களை கவர்ந்து காரியத்ைத சாதித்து விடுவீர்கள். திறமை பேசப்படும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம் ( சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொது: நேர்மையுடன் செயல்படுவீர்கள். நினைத்தது நடக்கும். வார இறுதியில் திருப்பத்தை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை நிலவும்.

பெண்களுக்கு: கணவருடன் சுமூக உறவு காணப்படும். மனதில் நினைத்தது நடந்தேறும். செலவுகள் குறையும், வரவு அதிகரிக்கும். அலுவலக சூழல் சாதகமாக இருக்கும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சாதக போக்கு காணப்படும். காரியங்கள் அனுகூலமாக இருக்கும். வேலைப்பளு குறையும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

விருச்சிகம் ( விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம். கேட்டை முடிய)

பொது: உடல் நலனில் அக்கறை தேவை. வீண் செலவுகள் வந்து மனதை வருத்தும். அலைச்சலைக் குறைக்கவும். முன் கோபம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு வித்திடும். வெளியூர் பயணத்தால் லாபம் உண்டாகும்.

பெண்களுக்கு: கணவருடன் கோபம் கொள்ளாமல் அனுசரித்து நடந்து கொள்ளவும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலுவலகத்தில் சந்தோஷ செய்தி காத்திருக்கிறது. சேமிப்பு பெருகும்.

வேலை பார்ப்போருக்கு: கவனமுடன் செயல்படவும். சக ஊழியர்களால் புதுப் பிரச்சினைக்கு வாய்ப்பில்லை. வார இறுதியில் நல்ல செய்தி வந்து சேரும்.

தனுசு (மூலம், பூராடம். உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொது: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். கோபத்தைக் குறைக்கவும். எதிலும் நிதானம் தேவை. பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள்.

பெண்களுக்கு: பண வரவு குறைவாக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. கணவர் உங்களது கட்டுப்பாட்டில் இருப்பார். வீண் அலைச்சல் உண்டாகும்.

வேலை பார்ப்போருக்கு: சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும். தேவையில்லாத பிரச்சினைகளில் மூக்கை நீட்டுவதை தவிர்க்கவும். அலுவல் ரீதியிலான பயணம் இருக்கும்.

மகரம் ( உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொது: சகோதர வழியில் சில பிரச்சினைகள் உருவாகலாம். பயணங்களில் கவனம் தேவை. முக்கிய முடிவுகளில் கவனம் தேவை. பொருள் இழப்பை தவிர்க்க முயற்சிக்கவும். முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைப்பது குறைவாகவே இருக்கும்.

பெண்களுக்கு: கணவரால் பெருமை சேரும். எதிலும் சுப முடிவை எதிர்பார்க்கலாம். அலைச்சல் குறையும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும்.

வேலை பார்ப்போருக்கு: சிந்தித்து செயல்படுவது அவசியம். சக ஊழியர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். புதிய பொறுப்பு தேடி வரும்.

கும்பம் ( அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொது: செலவுகளைக் குறைப்பீர்கள். பொருளாதாரம் மேம்பாடு அடையும். சோம்பலை தவிர்த்தால் பல லாபங்கள் உண்டாகும். மற்றவர்களின் மரியாதையை சம்பாதிக்க சிரமப்படுவீர்கள்.

பெண்களுக்கு: கணவர், குடும்பத்தாருடன் விட்டுக் கொடுத்துப் பழகவும். செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களின் ஆலோசனையால் ஆபத்தை விலைக்கு வாங்க நேரிடும், கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: வேலைப்பளு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் கவனம் தேவை. கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படவும். சக ஊழியர்களால் சிக்கல் ஏற்படலாம்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொது: எதிர்ப்புகள் விலகும். நட்பு வட்டாரம் பெருகும். உற்றார், உறவினர் உறுதுணையாக இருப்பார்கள். பொருள் வரவு உண்டாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் மேம்பாடு அடையும்.

பெண்களுக்கு: முக்கிய முடிவுகளில்கவனம் தேவை. மன உறுதியுடன் எதையும் எதிர்கொண்டு சமாளிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கணவருடன் சுமூக உறவு காணப்படும். அலைச்சல் குறையும்.

வேலை பார்ப்போருக்கு: புதிய வேலைக்கு மாறும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். மன உறுதியுடன் எதிலும் ஈடுபடவும். வார இறுதியில் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். சக ஊழியர்களால் நன்மை உண்டாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும்!
Next post வசீம் அக்ரமின் பந்துவீச்சு சாதனையை முறியடிப்பதே இலக்கு: முரளிதரன்