மக்கள் நீதி மய்யம் – கட்சியை அறிவித்தார் கமல்!!

Read Time:4 Minute, 58 Second

மதுரையில் புதன்கிழமை மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் ´மக்கள் நீதி மய்யம்´ என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார்.

´37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்து கொண்டிருந்த கூட்டத்தை தற்போது நீங்கள் பார்த்து கொண்டிருந்தீர்கள்´´ என்று உரையின் தொடக்கத்தில் தனது ரசிகர்கள் குறித்து கமல் ஹாசன் பேசினார்.

´´இன்று கட்சியின் பெயரை மட்டும் அறிவித்து சென்றுவிட நான் எண்ணியிருந்தேன். ஆனால், நண்பர் கேஜ்ரிவால் இன்றே நம் கட்சியின் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்´´ என்று கமல் தெரிவித்தார்.

´´எத்தனை நாட்கள் ஊமையாக இருப்பது? இன்று பேசும் நாள்´´ என்று குறிப்பிட்ட கமல் தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் விளக்கினார்.

கட்சியின் கொள்கைகள் பின்வருமாறு:-
நல்ல மற்றும் தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியல் இருக்காது.

´´நாங்கள் ததத்தெடுக்கும் 8 கிராமங்களில் அனைத்து பணிகளையும் நாங்கள் நிச்சயமாக செய்து முடிப்போம்´´ என்று கமல் மேடையில் சூளுரைத்தார்.

´´நல்ல கட்சிக்கு வாக்களித்து இருந்தால் 6000 ரூபாய் அல்ல ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் ரூபாய் சம்பாதிக்க முடியும்´´ என்று அவர் மேலும் கூறினார்.

´´மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்´´ என்று கமல் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சி பதிவாகி விட்டது. குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் நீடிக்கும் எண்ணத்தில் இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

´´எனது வயது 63. அடுத்த 40 ஆண்டுகள் ஆளும் கனவோடு நான் இங்கு வரவில்லை. எதிர்காலத்தின் விதையை தேடி இங்கு நான் வந்துளேன். என் வயதை கிண்டலடிக்கிறார்கள். ஆயுள் குறைவாக உள்ள சிலர்´´ என்று கமல் ஹாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.

காவிரி பிரச்சனை தொடர்பாக பேசிய அவர் , ´´முறையான பேச்சுவார்த்தை நடத்தினால் எந்த மாநிலத்திடமும் நமக்கு தேவையானதை கேட்டு பெற முடியும்´´ என்று குறிப்பிட்டார்.

தனது கட்சியின் சின்னம் குறித்து பேசிய அவர், ´´ இதில் உள்ள 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலங்களைக் குறிக்கும். இதை நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். அதேபோல், இதில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும்´´ என்றும் கமல் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய டெல்லி மாநில முதல்வர் கேஜ்ரிவால், ´´இந்த பொதுக்கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை கமல் ஹாசன் தொடங்கியுள்ளார். ஒரு திரையுலக பிரபலமாக நான் எப்போதுமே அவரது ரசிகனாக இருந்துள்ளேன் ஆனால், இப்போது அவர் களத்தில் நின்று போராடும் நிஜ கதாநாயகனாக திகழ்கிறார்´´ என்று தெரிவித்தார்.

தமிழக மக்கள் கமலின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2.096 சதவீதம் உயர்வு!!
Next post நடிகை குஷ்பு குடும்பத்துக்கே ஏற்பட்ட சோகம்!