மன்னார்குடாப் பிரதேச எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப் படவுள்ளது
மன்னார்க்குடா பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வு தொடர்பாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் எதிர்வரும் 7ம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாக பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது நிலமட்டத்தில் உள்ள 3பிரிவுகளில் ஒருபிரிவிற்கான எண்ணெய் அகழ்வு இந்த நிறுவனத்திற்கு வழங்கப்படயிருப்பதாக அமைச்சின் செயலாளர் பீ.ஏ குணசேகர தெரிவித்துள்ளார் ஏணைய பிரிவுகளுக்கும் கேள்வி கோரல்கள் விடுக்கப்பட்ட போதிலும் போதுமானளவு கேள்வி கோரல்கள் கிடைக்கப் பெற்றமையினால் அவற்றுக்கு மீண்டும் கேள்விகோரல்கள் விடுப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.