பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து கீதாஞ்சன குணவர்தன விலகல்

Read Time:1 Minute, 23 Second

ஆளுங்கட்சியின் எம்பியும் பிரதி சபாநாயகருமான கீதாஞ்சன குணவர்தன பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவர் தம் இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் டபிள்யு.ஜே.எம் லொக்குபண்டாரவிரம் நேற்று கையளித்ததாக சபாநாயகர் தெரிவித்தார். தனது சகோதரர் ஆளுங்கட்சியின் பிரதான கொரடாவாக இருக்கின்ற நிலையில் தான் பிரதி சபாநாயகராக இருப்பது அரசியல் விழுமியங்களுக்கு அப்பாற்பட்டது எனக்குறிப்பிட்டே கீதாஞ்சன இந்த பதவியை இராஜினாமா செய்திருக்கிறார் கீதாஞ்சன குணவர்தனவின் மூத்த சகோதரர் தினேஷ் குணவர்தன ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அண்மையில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். குண்டுவெடிப்பில் உயிரிழந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளேயின் இடத்துக்கே ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாக தினேஷ் குணவர்தன தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது தெரிந்ததே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என அமெரிக்கா மீண்டும் கோரிக்கை
Next post 17கட்சிகள், 44சுயேட்சைக்குழுக்கள் இரு மாகாண சபைகளுக்குமான களத்தில்..