கரும்புலிகள் தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழர் தாயகம் முழுவதும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது இதனையொட்டி நாடுமுழுவதும் முப்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் கரும்புலிகள் தினமாகிய இன்று புலிகள் எந்த இடத்திலும் எந்தநேரத்திலும் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சத்தில் அரசுத்தரப்பினர் இன்றைய நிகழ்ச்சி நிரல்களை வேறுதினங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளில் முப்படையினர் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெற்கிலும் தலைநகர் கொழும்பு உட்படபல பகுதிகளிலும் பாதுகாப்புப்படையினர் உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது இதேவேளை கரும்புலித் தினத்தையொட்டி வன்னிப்பிரதேசத்தில் மஞ்சள் சிவப்பு கொடிகள் பறக்க விடப்பட்டு ஆங்காங்கே கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன என வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன.