ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு : 23 பேர் உயிரிழப்பு!!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று காலை சுமார் 8:30 மணியளவில் காபூல் நகரில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததோடு, 5 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய இரண்டு கார் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இன்று மட்டும் நடந்த தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.