ராதிகா ஓர் சிங்களப் பெண் – பாலு ; என் தந்தை ஓர் பச்சைத் தமிழன் – ராதிகா

Read Time:3 Minute, 12 Second

சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு தடுத்ததை அடுத்து பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிலிம் சேம்பரில் நேற்று நடைபெற்றது. செயலாளர் பதவிக்கு போட்டிடும் கேயார், நடிகை ராதிகா ஆகியோர் அதன் பின்னர் வாக்களித்தனர். நடிகை ராதிகா வாக்களித்து விட்டு வெளியே வந்தபோது, ராம நாராயணன் அணியை சேர்ந்த கே.பி. பிலிம்ஸ் பாலு வாக்களிக்க உள்ளே வந்தார். கடந்த ஒருவார காலமாக தேர்தல் பிரசார மேடைகளில் பாலு, நடிகை ராதிகா தமிழ் பெண் அல்ல என்றும், அவர் ஒரு சிங்கள பெண் என்றும் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது. இதை மனதில் வைத்திருந்த ராதிகா பாலுவை நேருக்கு நேராக சந்தித்தபோது, நீங்கள் எப்படி அப்படி பேசலாம் என்று கேட்டார். உடனே பாலுவுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் சூழ்ந்தனர். இதையடுத்து ராதிகாவுக்கு ஆதரவாக அவரது கணவர் சரத்குமார், சகோதரர் ராதாரவி, பஞ்சு அருணாசலம் உள்ளிட்டோர் சூழ்ந்து கொண்டனர். எனது தந்தை எம்.ஆர்.ராதா பச்சை தமிழன். அப்படியிருக்க நீங்கள் என்னை எப்படி அவ்வாறு கூறலாம் என்று ராதிகா ஆவேசமாக குரலெழுப்பினார். இதையடுத்து பாலுவுக்கு ஆதரவாகவும், ராதிகாவுக்கு ஆதரவாகவும் பலரும் பேசினார்கள். இதனால், ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இரு தரப்பினரும் சரமாரியாக ஒருவரையொருவர் ஆவேசமாக திட்டிக் கொண்டனர். இந்த நிலைமையில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பிலிம் சேம்பர் வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இதனை அவதானித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர்கள் கிருஷ்ணமூர்த்தி, முரளி ஆகியோர் இரு பிரிவினருக்கும் இடையே புகுந்து அவர்களை பிரித்ததுடன், சமாதானமாக போகும்படி அறிவுரை கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post 48 புலிகள் பலி – முக்கிய தளம் “மைக்கேல் பேஸ்” பகுதி பிடிபட்டது