கொட்டாவ நகரில் விற்பனை நிலையமொன்றில் தீ!!
Read Time:51 Second
கொட்டாவ நகரத்தில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிலையமொன்று தீப்பற்றியுள்ளது.
இன்று (25) மாலை இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீயை அணைப்பதற்காக கொழும்பு தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் தீயினால் ஏற்பட்ட அழிவு தொடர்பிலும் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.
Average Rating