மண்டேலா வாழ்க்கை, திரைப்படம் ஆகிறது
தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பற்றி ஆலிவுட்டில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் மோர்கன் ப்ரீமன், இப்படத்தை தயாரிக்கிறார். அவரே மண்டேலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜான் கர்லின் என்பவர் எழுதிய மண்டேலா பற்றிய புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்படுகிறது. இதில், மண்டேலா தென்ஆப்பிரிக்க அதிபராக பதவி வகித்த முதல் ஆண்டில் அவரது பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நடந்த சம்பவங்கள் இடம்பெறும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.