பொது நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டி மீண்டும் முத்தம்
டெல்லியில் கடந்த ஆண்டு பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவிடம் முத்தம் பெற்றதற்காக, இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் அவர் மீண்டும் பொது நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்துள்ளார். இந்த தடவை அவர் நல்ல காரியத்துக்காக முத்தம் கொடுத்தார். லண்டனில் நடந்த குளோபல் டைவர்சிட்டி விருது வழங்கும் விழாவில் அவர் விருது பெற்றார். நடமாடும் நீரிழிவு பரிசோதனை மையங்கள் நடத்தி வரும் ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக, அவர் அந்நிகழ்ச்சியில் ஒரு ருசிகர அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறக்கட்டளைக்கு அதிக நன்கொடை அளிப்பவர், தன்னிடம் முத்தம் பெறலாம் என்று அவர் அறிவித்தார். ஆனால் கன்னத்தில்தான் முத்தம் கொடுப்பேன் என்று அவர் உஷாராக தெரிவித்து விட்டார். இதையடுத்து, ஒரு வாலிபர் 12,500 பவுண்டுகள் (ரூ.10 லட்சம்) கொடுத்தார். உறுதி அளித்தபடி, அவரது கன்னத்தில் ஷில்பா ஷெட்டி மூன்று முத்தங்கள் கொடுத்தார்.