பிரிட்டனில் குண்டு வெடித்து 5 பேர் பலி!!
பிரிட்டனில் கடை ஒன்றில் குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனில் குஜராத் மக்கள் அதிகமாக வசித்துவரும் லெய்செஸ்டர் நகரில் பிரபல ஹிங்க்லே சாலைப் பகுதியில் கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குண்டு வெடிப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக தெரியவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.