புலிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு கருணா மீண்டும் தயார் திவயின தெரிவிக்கிறது
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் கருணாஅம்மான் மீண்டும் கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட தயார் என்று அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் திவயினவிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டோருடன் கருணாஅம்மான் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை முதலமைச்சர் பதவியைப் பிள்ளையான் வழங்க முன்வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனக் கருணாஅம்மான் குறிப்பிட்டுள்ளதாகத் திவயின இதழ் மேலும் தெரிவிக்கிறது.