இஸ்லாமாபாத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி
இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதி அருகே நடந்த தற்கொலை படைத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இந்த மசூதியில் புகுந்து கொண்ட தீவிரவாதிகளை கமாண்டோ படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தி மீட்டார் அதிபர் முஷாரப். இதற்குக் காரணமான முஷாரப்பை தூக்கிலிட வலியுறுத்தி நேற்று மாலை அங்கு பேரணி நடந்தது. இரவு 7.50 மணியளவில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 18 போலீசாரும், 2 பொது மக்களும் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். போலீஸாரைக் குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் கிலானியின் உள்நாட்டு விவகார ஆலோசகர் ரஹ்மான் மாலிக் நேரில் சென்று பார்வையிட்டார். தற்கொலை படையின் தாக்குதல் இது என்பதை அவர் உறுதி செய்தார்.