சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?

Read Time:3 Minute, 18 Second

இரண்டு வருட பிரிவுக்கு பின்னர் சிம்புவும், நயன்தாராவும் திடீரென்று சந்தித்து மனம் விட்டு பேசினர். சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். வல்லவன் படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர். இந்நிலையில் ஐதராபாத்தில் துளசி படப்பிடிப்பில் நயன்தாரா நடித்துக்கொண்டிருந்தார். அவரை சந்திக்க சிம்பு சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் சிம்புவை நயன்தாரா சந்திக்கவில்லை. சிம்பு ஏமாற்றத்துடன் திரும்பினார். மேலும் கடந்த ஒரு வருடமாக சென்னை பக்கமே தலை காட்டாமல் தெலுங்கு படங்களிலேயே நயன்தாரா கவனம் செலுத்தி வந்தார். தனுஷ் ஜோடியாக யாராடி நீ மோகினி படத்தில் நயன்தாரா நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டனர் என்று திரையுலகினரும், அவர்களது நண்பர்களும் முடிவு செய்தனர். தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஜெமினி அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு மூன்று நாட்களுக்கு முன் நவ்தீப், த்ரிஷா, நயன்தாரா, விஷால் ஆகியோர் சென்றிருந்தனர். இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று சிம்பு அங்கு வந்தார். சிம்புவைக் கண்டதும் விஷால், நவ்தீப், த்ரிஷா எல்லோரும் கை தட்டி, கரகோஷம் செய்து வரவேற்றனர். நயன்தாராவை கண்டதும் சிம்பு இமைகொட்டாமல் பார்த்தார். நயன்தாராவும் புன்னகையுடன் பார்த்தார். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நயன்தாராவை, திடீரென்று சிம்பு, உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச்சென்றார். இருவரும் அரை மணி நேரத்துக்கு பிறகு திரும்பி வந்தனர். இதனால் இவர்கள் மீண்டும் காதல் வலையில் விழுந்ததாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து நயன்தாரா தரப்பில் விசார்த்தபோது, ‘இனி காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்து நடிக்கும் படங்கள் பற்றிதான் இருவரும் பேசினர்’ என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி அளித்தவருக்கு 57 மாத சிறை
Next post சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள்..