By 9 July 2008 2 Comments

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள்..

swiss-vmt-0052.JPGswiss-vmt-0053.JPGswiss-vmt-0054.JPGவிடுதலைப் போராட்டத்திற்காக தம்மை முற்றாக அர்ப்பணித்து போராடி உயிர்நீத்த போராளிகள் பொதுமக்கள் என அனைவரையும் ஒரே தருணத்தில் நினைவு கூருமுகமாக 05.07.08 அன்று சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அப்போல்டன் எனும் இடத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வீரமக்கள் தின நிகழ்வுகளில் சுவிர்சர்லாந்தின் சகல மாநிலங்களிலும் இருந்தும் பெருந்திரளான மக்கள் கூட்டமும் ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளில் இருந்து கழக, ஏனைய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்து தமது நினைவஞ்சலிகளை உணர்வு பூர்வமாக செலுத்தினர். மரணித்த அந்த மகத்தான மனிதர்கள் அனைவருக்குமான நினைவுச்சுடர் ஈபிஆர்எல்எப் சுவிஸ்கிளைத் தோழர் செந்தாவினால் ஏற்றப்பட்டு ஆரம்பமான நிகழ்வுகளில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் சகல அமைப்புக்களையும் சேர்ந்த உறுப்பினர்கள் வீரமக்களுக்கு மலரஞ்சலி செலுத்தி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர்.

swiss-vmt-0001.JPG
swiss-vmt-0003.JPG
swiss-vmt-0004.JPG
swiss-vmt-0005.JPG
swiss-vmt-0006.JPG
swiss-vmt-0007.JPG

தொடர்ந்து சுவிஸ்வாழ் வளர்ந்து வரும் தமிழ் இளைஞர் யுவதிகளின் வழிநடத்தலில் சிறுவர்களுக்கான வினோத உடை போட்டிகள் இடம் பெற்றன.

swiss-vmt-0010.JPG
swiss-vmt-0011.JPG
swiss-vmt-0012.JPG
swiss-vmt-0013.JPG
swiss-vmt-0014.JPG
swiss-vmt-0015.JPG
swiss-vmt-0016.JPG
swiss-vmt-0017.JPG
swiss-vmt-0018.JPG

திருமதி. சக்திவடிவேல் பகவதி அவர்களின் பாடல்கள்,

swiss-vmt-0025.JPG
swiss-vmt-0025a.JPG

தமிழ் சிறார்களின் பின்னணி இசைக்கு ஆடுதல்,

swiss-vmt-0026.JPG
swiss-vmt-0027.JPG
swiss-vmt-0028.JPG
swiss-vmt-0019.JPG
swiss-vmt-0020.JPG
swiss-vmt-0021.JPG

“நாடக புரவலர்” திரு. வையாபுரி அவர்களின் நெறியாள்கையில் ஓவியம் வரையாத தூரிகை எனும் நகைச்சுவையுடன் கூடிய சமூக நாடகம்,

swiss-vmt-0029.JPG
swiss-vmt-0030.JPG
swiss-vmt-0031.JPG
swiss-vmt-0032.JPG

மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி,

swiss-vmt-0022.JPG
swiss-vmt-0023.JPG
swiss-vmt-0024.JPG

மாணவர்களின் கலைத்திறன் வெளிப்பாட்டு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வருகை தந்திருந்த அதிதிகள் சார்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பிரான்ஸ் கிளையைச் சேர்ந்த லோகா, புளொட் ஜேர்மன் கிளையைச் சேர்ந்த சந்திரன், புளொட் பிரான்ஸ் கிளையைச் சேர்ந்த பிரபா ஆகியோர் தமது அஞ்சலி உரைகளை நிகழ்த்தினர். அத்தோடு ஈபிஆர்எல்எப் தலைவர் இரா.துரைரட்ணம் (இரட்ணம்) நோர்வேயில் இருந்து தொலைபேசி மூலம் தமது நினைவஞ்சலி உரையை தெரிவித்தார்.

swiss-vmt-0048.JPG
swiss-vmt-0049.JPG
swiss-vmt-0050.JPG
swiss-vmt-0051.JPG

அங்கு பேசிய அவர்கள் மரணித்த அந்த மகத்தான மனிதர்களின் அபூர்வ தியாகங்களை மனம் நெகிழ்ந்து போற்றியதுடன் இந்த மகத்தான மனிதர்களில் 90 விழுக்காடுகளுக்கு அதிதமானோர் புலிப்பாசிசத்தினால் காவு கொள்ளப்பட்டவர்கள் என்பதை சுட்டிக் காட்டியதுடன் தொடர்ந்தும் இப்பட்டியல் நீண்டு செல்வதாகவும் இந்த துர்பாக்கிய நிலைமையை மாற்றியமைக்க மக்கள் தங்களான பங்களிப்புக்களையும் செய்ய வேண்டும் என தாழ்மையாக வேண்டியதுடன் இந்நிகழ்வு ஓர் கொண்டாட்ட நிகழ்வல்ல என்றும் எம் தேசத்தை நேசித்த மகத்தான மனிதர்களின் தியாகங்களுக்கு நன்றி கூறும் ஓர் நன்நாள் என்றும் இந்நாளில் மக்களாகிய நீங்கள் உங்கள் தார்மீக கடமைகளை செய்வதை கண்ணுற்று நாம் இங்கு திருப்தி அடைகின்றோம் என்றும் கூறினர்.

swiss-vmt-0042.JPG
swiss-vmt-0043.JPG
swiss-vmt-0044.JPG

தொடர்ந்து நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரும் தமிழர் ஜனநாயக தேசியக் கூட்டணி தலைவரும் இலங்கையில் மூத்த அரசியல்வாதியுமான திரு.ஆனந்தசங்கரி அவர்கள் பேசுகையில் தமிழ் மக்களின் விடியலுக்காய் தம் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட இந்த மனிதர்களை நினைவு கூருகின்ற இந்த பொன்னான நாளிலே புலிப் பாசிசம் தொடர்ந்தும் தன்னுடைய வக்கிரங்களை தொடர்வதை காண்பதையிட்டு வேதனைப் படுகின்றேன் என்றார். இன்நாள் தமிழ் மக்களின் மனங்களின் என்றும் இருக்க வேண்டிய ஒரு நன்நாள் எனக் கூறிய அவர் இந்நாளை மக்களின் மனங்களில் இருந்து அகற்றுவதற்காக பொங்குதமிழ் எனும் பெயரில் மங்குதமிழ் நடாத்துகின்ற பாசிசப் புலிகளின் மேடையில் கனைப்பதற்காக சர்வகலாசாலைக்கு குதிரையில் சென்ற குதிரை கஜேந்திரனார் கப்பல் ஏறி வந்திருக்கின்றார் என்றால் அது அவரது தப்பு கணக்கு என நான் கருதுகின்றேன் என்றதுடன் புலிகள் இந்நாளில் நீங்கள் இங்கு வருவதைத் தடுப்பதற்காக கோடா கோடி பணங்களை செலவழித்து எத்தனையோ ஏற்பாடுகளைச் செய்திருந்தும் நீங்கள் இங்கு மண்டபம் நிறைந்து குழுமியிருப்பதை பார்க்கும் போது உங்கள் மனங்களில் எம்மவர்கள் எமக்காக செய்த தியாகங்கள் பதிந்துள்ளதென்பதை நான் உணர்கின்றேன் என்றார்.

தொடர்ந்து நன்றியுரையாற்றிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ்ரஞ்சன் பேசுகையில் இங்கு குழுமியிருக்கும் சுவிஸ்வாழ் தமிழ் மக்களின் கடமையுணர்வு கண்டு தான் பெருமிதம் அடைவதாகவும் பல இன்னல்களையும் தாண்டி எமது தாயக விடுதலையைக் குறியாக கொண்டு உயிர் துறந்த கழக கண்மணிகள் உட்பட அனைத்து தியாகிகளையும் நினைவு கூரும் இந்த வரலாற்று கடமையை தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு பாசிசப் புலிகள் தமது முழுப்பலத்தையும் பிரயோகிக்கின்ற போதும் அவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் எங்களுக்கு என்றென்றும் பக்கபலமாக நிற்கும் மக்களாகிய உங்கள் பலம் இருக்கும்வரை எங்கள் நிகழ்வுகள் இனிதே இடம்பெறும் எனக் கூறி சகலருக்குமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார்.

swiss-vmt-0045.JPG
swiss-vmt-0046.JPG
swiss-vmt-0041.JPG

இறுதியாக 15.06.2008 அன்று தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினரால் நாடாத்தப்பட்ட தமிழ் அறிவுத்திறன் போட்டிகளில் சித்தியெய்திய மாணவர்களுக்கான பரிசில்களை பிரதம விருந்தினர் திரு.வீ.ஆனந்தசங்கரி மற்றும் பெரியோர்களினால் வழங்கப் பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

swiss-vmt-0057.JPG
swiss-vmt-0058.JPG
swiss-vmt-0059.JPG
swiss-vmt-0060.JPG
swiss-vmt-0061.JPG
swiss-vmt-0062a.JPG
swiss-vmt-0063.JPG
swiss-vmt-0064.JPG
swiss-vmt-0065.JPG
swiss-vmt-0066.JPG
swiss-vmt-0067.JPG
swiss-vmt-0068.JPG
swiss-vmt-0069.JPG
swiss-vmt-0070.JPG
swiss-vmt-0071.JPG
**************************************************

swiss-vmt-0053.JPG
swiss-vmt-0052.JPG
swiss-vmt-0054.JPG
***********************************************
swiss-vmt-0033.JPG
swiss-vmt-0034.JPG
swiss-vmt-0035.JPG
swiss-vmt-0036.JPG
swiss-vmt-0037.JPG
swiss-vmt-0038.JPG
swiss-vmt-0039.JPG
swiss-vmt-0040.JPG
swiss-vmt-0055.JPG
swiss-vmt-0056.JPG
swiss-vmt-0006.JPG

தகவல் & புகைப்படங்கள்… புளொட் சர்வதேச ஒன்றியம்!2 Comments on "சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள்.."

Trackback | Comments RSS Feed

  1. Shann says:

    wow…what crowd…..Keep up the…good work
    Nice photo shop work

  2. Shann says:

    you know i was bein scarcastic!!!!

    you won’t publsih this comment

Post a Comment

Protected by WP Anti Spam