அழிந்து வருவதாக கவலைப்பட்ட நிலையில் அண்டார்டிகாவில் 15 லட்சம் அடேலி இன பென்குயின்கள்!!

Read Time:4 Minute, 10 Second

புவி வெப்பமயம் உள்ளிட்ட பிரச்னைகளால் அண்டார்டிகாவில் பென்குயின்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள தீவில் 15 லட்சம் அடேலி வகையை சேர்ந்த 15 லட்சம் பென்குயின்கள் குவிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்டார்டிகா கடல் பகுதிகளில் அடேலி வகை பென்குயின்கள் காணப்படுகின்றன. கடுமையான இயற்கை இடர்பாடு, புவி வெப்பமயமாதல் மற்றும் மனித நடவடிக்கைகளால் அன்டார்டிகாவில் வாழும் பென்குயின்கள் படிப்படியாக அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இனப்பெருக்க காலங்களில் பென்குயின் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்காமல் அவை பசியில் செத்து மடிகின்றன.
அண்டார்டிகா கடலில் நீண்ட தூரத்துக்கு பனி சூழ்ந்து காணப்படுவதால், தாய் பென்குயின்கள் தங்கள் குஞ்சுகளுக்கு இரை தேடி கடலில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அங்கு கிடைக்கும் சொற்ப உணவை எடுத்துக் கொண்டு கரை திரும்புவதற்குள், குஞ்சுகள் பசி தாங்காமல் இறந்து விடுகின்றன.

கடந்தாண்டு இனப்பெருக்க காலத்தில் இதுபோன்ற சோகம் அதிகளவில் நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதேநிலை நீடித்தால், மிகவும் அபூர்வ இனமாக கருதப்படும் பென்குயின்கள், எதிர்காலத்தில் அண்டார்டிகா பகுதியில் இல்லாமல் போய் விடும் என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், அண்டார்டிகா தீபகற்பத்தின் வடக்கு மூலையில் உள்ள ‘டேஞ்சர் ஐலேண்ட்’ என அழைக்கப்படும் ‘அபாய தீவு’ பகுதியில், ஒரே இடத்தில் 15 லட்சம் அடேலி பென்குயின்கள் கூடி வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை கண்டுபிடித்த ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஹீத்தர் லின்ச் கூறுகையில், “தென் அமெரிக்கா அருகே அண்டார்டிகாவின் வடக்கு மூலையில் இந்த தீவு அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் மிகவும் கடினமான பனிப்பாறைகள் சூழ்ந்துள்ளன. வெயில் காலங்களில் பனிக்கட்டிகள் உறைந்து நீர்மட்டம் உயர்வதால் இப்பகுதிக்கு எளிதாக செல்ல இயலாது. புவி வெப்பமயத்தில் இருந்தும், மனித நடமாட்டத்தில் இருந்தும் இப்பகுதி தப்பித்துள்ளன. அதனால், எந்தவித ஆபத்தும் இல்லாத சூழ்நிலை இங்கு நிலவுவதால் பென்குயின்கள் இதை தங்களின் வசிப்பிடமாக மாற்றியுள்ளன.

நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக முதலில் இதை கண்டுபிடித்தோம். பிறகு அது தவறாக இருக்கலாம் என நினைத்தோம். இதன் பின்னர் அபாய தீவிற்கு நேரடியாக ஆய்வுக்கு சென்று படகில் பயணித்து, ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி உயரக ேகமரா மூலம் புகைப்படம் எடுத்தோம். இதன் மூலம் அந்த பகுதியில் 15 லட்சம் அடேலி பென்குயின்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post N என்ற எழுத்தை பயன்படுத்த தடை – அரசு உத்தரவு!!
Next post (மகளிர் பக்கம்)பெண்களுக்கான  இணையதளம்!!