மெக்சிகோ நாட்டில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சாலை விபத்தில் 14 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். தெற்கு மெக்சிகோவில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தில் 20 பேர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வேராக்ரூஸ் என்ற இடத்தில் பேருந்து ஒன்று லாரியின் மீது நேருக்கு நேராக மோதியது என்றும், இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் லாரியில் பயணம் செய்தவர்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.