மீண்டும் அரை நிர்வாணமாக நடிக்கிறாரா பூஜாகாந்தி!!
வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை, தலைஎழுத்து படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் நடித்து வருகிறார். சர்ச்சைக்குரிய தண்டபாலயா படத்தில் ரவுடிப்பெண்ணாக நடித்தார். இதன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை அரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யும் காட்சிகளில் நடித்தார். இக்காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இந்த 2 படமும் சர்ச்சையாக அமைந்தாலும் ஹிட்டாக அமைந்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.
தற்போது இப்படத்தின் 3ம் பாகத்தில் நடிக்கிறார் பூஜா. சீனிவாசராஜு இயக்குகிறார். சில வருடங்களுக்கு முன் கர்நாடகாவில் தண்டபாலயா என்ற கிராமத்தில் நடந்த சில அசாதாரண சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தண்டபாலயா 2ம் பாகத்தில் அரை நிர்வாணமாக நடித்ததுபோல் 3ம் பாகத்திலும் அதுபோன்ற காட்சியில் பூஜா காந்தி நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி பட தரப்பில் விசாரித்தபோது பதில் எதுவும் சொல்லாமல் மழுப்புகின்றனர்.