காதலி நிகிதாவை திருமணம் செய்தால் சோப்ராஜ×க்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்
கடத்தல் மன்னன் சார்லஸ் சோப்ராஜ், ஒரு இரட்டை கொலைக்காக நேபாள சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். அவன் நிகிதா என்ற 20 வயது நேபாள இளம்பெண்ணை காதலித்து வருகிறான். சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் நிகிதாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளான். ஆனால் அப்படி நிகிதாவை திருமணம் செய்தால், சோப்ராஜ×க்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று போலீசார் கூறியுள்ளனர். ஏனென்றால், சோப்ராஜ×க்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். எனவே, பலதார திருமண தடை சட்டத்தின்படி, சோப்ராஜ×க்கு தண்டனை கிடைக்கும் என்று போலீசார் கூறினர்.