(சினிமா செய்தி)அமலாபால் கண் தானம்!!
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பார்த்திபன், சீதா, திரிஷா, மீனா, சினேகா, லைலா உள்பட சிலர் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்வதற்கான பத்திரத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர். அந்தவரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர், அமலா பால். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தனது கண்களைத் தானம் செய்வதற்கான பத்திரத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்.
அவர் கூறுகையில், ‘உலகிலேயே இந்தியாவில்தான் கண்பார்வை இல்லாதவர்கள் அதிகமாக இருக்கின்றனர். காரணம், கண்தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான். இனிமேலாவது பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த அனவைரும் முன்வர வேண்டும்’ என்றார்.