சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது!!
புஸ்ஸல்லாவ, அய்ரி பகுதி, பொரட்டாசி வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்து வந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புஸ்ஸல்லாவ பொலிஸார் நடத்திய விசாரணையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதி செய்யப்பட்ட இந்தியர் இன்று (05) கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.