கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை!!
பமுனுகம, தல்தியவன்ன கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார்.
தல்தியவன்ன கடற்பகுதியில் குளிக்க சென்ற குழுவில் இருந்த இளைஞன் ஒருவன் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி, கரபிங்சாவத்த பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காணமல் போயுள்ளார்.
பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளின் உதவியோடு தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.