By 10 July 2008 0 Comments

சீனாவில் ஒரே சுரங்கத்தில் 15 டன் தங்கம்!

சீனாவில் ஒரே சுரங்கத்தில் 15 டன் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென்மேற்கு குவாங்ஜி பகுதியில் நானெங்கில் உள்ள அந்த சுரங்கத்தில் முன்னதாக 5 டன் தங்கம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. ஆனால், அச்சுரங்கத்தில் தற்போது 15 டன் இருப்பது தெரியவந்துள்ளதாக, சீனாவின் தேசிய தங்க நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலக அளவில் பூமிக்கு அடியில் தங்கம் அதிகம் இருப்பு உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா 7-வது இடத்திலும், தங்கம் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் 2-வது இடத்திலும் உள்ளது. அந்நாட்டில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் டன் வரை தங்கம் இருப்பு உள்ளது. நாட்டில் உள்ள மொத்த 330 பெரிய தங்கச் சுரங்கங்களில் இருந்து தினசரி 11 ஆயிரம் டன் தங்கத் தாதுவை சீனா தோண்டி எடுக்கிறது. உற்பத்திக்கு ஏற்றவாறு தங்க நுகர்வும் சீனாவில் அதிக அளவில் உள்ளது. அங்கு சென்ற ஆண்டு மட்டும் 363.3 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam