காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இரண்டு பேர் பலி !!
காலி – மாத்தறை பிரதான வீதியில் அஹங்கம, வெல்ஹேன்கொட பகுதியில் இன்று (06) அதிகாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கார் ஒன்றும், மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த டிப்பர் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காரில் பயணித்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரில் ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்றும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் படுகாயமடைந்த இரண்டு பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.