ஈராக் தரவேண்டிய 700 கோடி டொலர் கடனைத் தள்ளுபடி செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

Read Time:1 Minute, 51 Second

ஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. இரண்டு நாள் பயணமாக ஈராக்கியப் பிரதமர் நூரி அல் மலிக்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வந்திறங்கிய சிறிது நேரத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ஈராக் அரசுடன் தனது இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் முகமாக பக்தாத்திற்கான தனது தூதுவர் ஒருவரையும் ஐக்கிய அரபு எமிரேடஸ் நியமித்துள்ளது.ஈராக் தனக்குத் திருப்பிச்செலுத்த வேண்டிய கடன்தொகை அனைத்தையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. ஈராக் மற்றும் சுன்னி அரபு நாடுகளுக்கிடையில் உறவுகள் மேம்பட்டு வருவதன் மற்றுமொரு அறிகுறியாக இந்த நடவடிக்கைகள் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சர் ஈராக் சென்றிருந்த நிலையில், 2003ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு நடந்து முடிந்த பின்னர், சுன்னி அரபு நாடொன்றிலிருந்து ஈராக் சென்ற அதிகாரிகளில் பெரும் பதவி கொண்டவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மெக்சிகோவில் விமான விபத்து
Next post காதலி நிகிதாவை திருமணம் செய்தால் சோப்ராஜ×க்கு மேலும் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்