அமெரிக்காவில் புலிகள் இயக்கத்துக்கு நிதியுதவி அளித்தவருக்கு 57 மாத சிறை

Read Time:3 Minute, 2 Second

ஐக்கிய அமெரிக்க அரசு புலிகள் அமைப்பை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுச் சட்டபூர்வமாக அந்த அமைப்பையும் அதன் செயற்பாடுகள் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளையும் தடை செய்த பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அமெரிக்க பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸார் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் புலிகள் இயக்கத்தினைத் தேடி தீவிர தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் பயனாக புலிகள் இயக்க உறுப்பினர்கள், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டோர் எனச் சந்தேகிக்கப்பட்ட பலரை இதுவரையில் அமெரிக்க பெடரல் பொலிஸார் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அண்மையில் புலிகள் அமைப்புகள் நிதி சேகரிப்பு மற்றும் புலிகள் இயக்கக் குழுவினருக்கு ஆதரவளித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் திருநாவுக்கரசு வரதராஜா எனப்படும் ஸ்ரீலங்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட 37 வயதுடைய தமிழரை பெடரல் பொலிஸார் கைது செய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் மேற்படி நபரைத் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்காகச் செயற்பட்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் பெடரல் பொலிஸ் பிரிவு வழக்குத் தொடுத்தது. தற்போது விசாரணைகளின் மூலம் மேற்படி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில் மேற்படி திருநாவுக்கரசு வரதராஜா எனப்படும் நபருக்கு அவருடைய பல்வேறு பயங்கரவாதத் தொடர்புக் குற்றங்களுக்கு மாறாக மொத்தம் 57 மாத சிறைத் தண்டனையை அமெரிக்க சமஷ்டிப் பிரதேச பெண் நீதிபதியாகிய கெதரின் சீ.பிளேக் விதித்துள்ளார். இந்தச் சிறைத் தண்டனை மேற்படி நபர் செய்துள்ள பிரதான குற்றங்களாகிய அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகிய புலிகள் இயக்கத்துக்காக அமெரிக்காவில் நிதி சேகரித்தது மற்றும் குறித்த புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் குழுவினருக்கு உதவி செய்தது ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுவதாக நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உரிமை இயக்கங்கள் எதிர்ப்பை மீறி சீன ஒலிம்பிக் தொடக்க விழாவில் புஷ் பங்கேற்கிறார்
Next post சிம்பு & நயன்தாரா மீண்டும் காதலா?