முதல் ரயில்வே கூலி பெண்( மகளிர் பக்கம்)!!
பெண்கள் பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்யத் தொடங்கினாலும் சுமை தூக்குதல் போன்ற வேலைகளை நகரங்களில் துணிச்சலாக ஏற்று ஆண்களுடன் மல்லுக்கட்டிச் செய்பவர்கள் குறைவு. இந்த எண்ணத்தைத்தான் உடைத்து எறிந்திருக்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியா மராவி. ஜபல்பூரிலுள்ள கட்னி ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றால், சந்தியா வியர்வை சிந்த லக்கேஜ்களை சுமந்து செல்லும் காட்சியைப் பார்க்க முடியும்.
கணவர் இறக்கும்வரை வீட்டுவேலை மட்டுமே பார்த்துவந்த சந்தியா, அதற்குப் பிறகு தனது மூன்று குழந்தைகளை வளர்க்க எடுத்த அவதாரம்தான் கூலிப் பெண். காலையில் விவசாய வேலைகளைச் செய்பவர், மாலையில் 45 கி.மீ. பயணித்து ஜபல்பூர் சென்று அங்கிருந்து கட்னி ஸ்டேஷன் சென்று கூலியாக உழைத்துவருகிறார்.