நீரில் மூழ்கி வெளிநாட்டவர் பலி!!
அஹூங்கல்ல பகுதியில் கடலில் குளிக்க சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
76 வயதுடைய இங்கிலாந்து நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (07) காலை குறித்த வெளிநாட்டவர் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பின்னர் பொலிஸார் நடத்திய தேடுதலில் நேற்று மாலை அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனை இன்று (08) நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.