மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு – இராணுவ வீரர் பலி!!
மணிப்பூர் மாநிலம் தெங்குனோபால் மாவட்டத்தில் உள்ள பைசென்ஜங் கிராமத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சிக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வைத்திருக்கலாம் என பொலிசார் கூறினர். இதே போல் கம்ஜோங் மற்றும் இம்பால் பகுதிகளில் நேற்று இரவு வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் உயிர் சேதம் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.