இங்கிலாந்தில் உள்ள கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறப்பு: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!
இங்கிலாந்தில் உள்ள ‘Sea Life Aquarium’ என்ற கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறந்து போயிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமான ‘Sea Life Aquarium’, இதில் அபூர்வமான கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பர்மிங்ஹாமில் அமைந்துள்ள இந்த மையத்தில், சுறாக்கள், ஜெல்லி மேஈன்கள் திடீரென உயிரிழந்தன.
கடந்த சில வாரங்களில் மட்டும் 12 சுறாக்கள், மொத்தம் உள்ள 26 ஆக்டபஸ் மீன்களில் 6 உயிரிழந்துள்ளது. அதிகமாக 75 நட்சத்திர மீன்களும், 49 ஜெல்லி மீன்களும் உயிரிழந்துள்ளன. மேலும் 31 கடல் குதிரைகளும் மர்மமான முறையில் இறந்துள்ளன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் மட்டுமின்றி பூங்கா நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.