ஒலிம்பிக்: பிரான்ஸ் அதிபர் நிகோலோ சர்கோசி பங்கேற்பு
ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் நிகோலோ சர்கோசி பங்கேற்பார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பிரச்சனை காரணமாக சீனாவில் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் பங்கேற்காமல் புறக்கணிப்பது பற்றி பிரான்ஸ் அதிபர் சர்கோசி பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஜப்பானில் நடைபெறும் ஜி-8 மாநாட்டில் பங்கேற்கும் சர்கோசி சீன அதிபர் ஹூ ஜின்டாவோவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஒலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்க தீர்மானித்திருப்பதாக சர்கோசி சீன அதிபரிடம் தெரிவித்தார். இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. சர்வதேச நட்புறவு மற்றும் சகோதரத்துவத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் முக்கியமானது என்று சர்கோசி கருதுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது
Average Rating