சீனாவில் 5 பேர் பலி
சீனாவில் காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். சீனாவின் எல்லைப் பகுதியில் ஜின் ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இங்குள்ள அழகு நிலையம் ஒன்றில் ஆயுதமேந்திய நபர்கள் கொள்ளையடிக்க முற்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்ய சென்றனர். அப்போது ஆயுதமேந்திய நபர்கள் போலீசாரை நோக்கி சுட்டனர். இதில் ஒரு போலீசார் காயமடைந்தார். இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் இருவர் காயமடைந்தனர். ஜின் ஜியாங் மாகாணம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாக இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு தீவிரவாதிகளின் பாதிப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.