காலுக்குமேல் கால்போட்டு அமருபவர் நீங்களா(மருத்துவம்)..?
இன்றைய, நாவீன காலத்தில் காலுக்குமேல் கால்ப்போட்டு அமருவது நாகரீகமாக மாறிவிட்ட நிலையில், காலுக்குமேல் கால்போட்டு அமருபவர்களுக்கு வெரிகோஸ் வெரின் பாதிப்பு அதிகம் என்று ஆய்வுகள் வெளியாகியுள்ளது.
பலருக்கும் கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்குபின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதனைத்தான் வெரிகோஸ்வெயின் (Varicose Vein) என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.
இந்நோய் ஏற்படுவதற்கு அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே வேலை செய்வது, அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற பல காரணங்கள் காணப்படுகின்ற போதிலும் தற்போது வௌயாகியுள்ள புதிய ஆய்வின்படி காலுக்கு மேல் கால்போட்டு அமருவதால் பாதங்களில் இருந்து இரத்தத்தை இதயத்துக்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டியுள்ளது. இந்நிகழ்வு தடைபடும் போது, இரத்தம் மீண்டும் கீழ்நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், அவ்வப்போது கால் பகுதியில் வலி, வேதனை, குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்பட்டு கால்பகுதியின் இரத்த ஓட்டம் கடுமையாக பாதித்து வெரிகோஸ் வெயின் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும்,வரும்முன்னர் தடுப்பதற்கும் முயல வேண்டும் என்பதுமே முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.