ஜேர்மனியில் பணத்திற்காக நோயாளியை கொலை செய்த நர்ஸ்(உலக செய்தி )!!

Read Time:2 Minute, 42 Second

ஜேர்மனி மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் ஆண் நர்ஸ் ஒருவர் பணத்திற்காக தனது நோயாளி ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணிபுரிபவர் Grzegorz Stanislaw Wolsztajn (36).

பிப்ரவரி மாதம் 12 ஆம் திகதி, அவரது பாதுகாப்பில் இருந்த முதியவர் இறந்து போனதாக கூறி ஆம்புலன்ஸை அழைத்தார். பிரேத பரிசோதனையின்போது இறந்துபோன முதியவரின் உடலில் சந்தேகத்திற்குரிய விதத்தில் ஊசியால் குத்தப்பட்ட அடையாளம் இருந்ததால் அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி அந்த முதியவரின் இரத்த சர்க்கரை அபாயகரமான அளவில் குறைந்திருந்தது. அவர் சர்க்கரை நோயாளியும் அல்ல. எனவே அவருக்கு வேண்டுமென்றே அதிக அளவு இன்சுலின் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகத்தின்பேரில் பொலிசார் Wolsztajnஐக் கைது செய்தனர். அவரிடமிருந்து இறந்துபோன முதியவரின் இரண்டு கிரெடிட் கார்டுகளும் 1200 யூரோக்களும் கைப்பற்றப்பட்டன.

அந்த முதியவரிடமிருந்து திருடியதாக Wolsztajn ஒப்புக்கொண்டார். பொதுவாக Munich பொலிசார் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளின் பெயரை வெளியிடுவதில்லை. ஆனால் இம்முறை, இந்த வேறு யாராவது கூட Wolsztajnஆல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரது பெயரை வெளியிட்ட பொலிசார் அவரைக் குறித்த பயனுள்ள தகவல்கள் யாரிடமிருந்தாவது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர்.

இதே போன்று இரண்டு நோயாளிகளைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஜேர்மனியை சேர்ந்த இன்னொரு நர்ஸ் பின்னர் இன்னும் 97 நோயாளிகளைக் கொலை செய்திருந்தது தெரிய வந்தது. அந்த நர்ஸ், நோயாளிகளைக் கொன்று விட்டு செயற்கை சுவாசம் மூலம் அவர்களை மீண்டும் உயிர் பெறச் செய்து ஒரு ஹீரோ போல வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயதானால் இன்பம் குறையுமா(அவ்வப்போது கிளாமர்)?
Next post விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்(அவ்வப்போது கிளாமர்)…!!