அரசாங்கத்தைக் கவிழ்க்க பணிப்புறக்கணிப்பு போராட்டம் என ஜனாதிபதி தெரிவிப்பு
இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளை அவதானிக்கும் போது அதன் உள்நோக்க அரசியல் நடவடிக்கைகள் புரிகிறது என்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மேலும் ஜே.வி.பி, ஐ,தே.கட்சி ஆகியவற்றுடன் தமிழ்க்கூட்டமைப்பும் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் ஒரு அம்சமாகவே அவர்கள் இதனைக் கைக்கொண்டதாக கூறினார். பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமையைக் கொண்டு இதனைத் தெரிந்து கொள்ளலாமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.